மின்னஞ்சல் : info@ikural.in

செய்தி :

வீழ்ந்தோம்!! விழித்தோம்!! விழுதாவோம்!!

முன்னுரை:

இளந்தமிழர் குரல் வீழ்ந்தோம்!! விழித்தோம்!! விழுதாவோம்!! விதை விளையாது என்று விதைக்காமல் இருக்காதே விளையாத விதை கூட விளையும் உன் வியர்வைத்துளியால்!!!

அறிமுகம்

சரித்திரங்கள் பல படைத்து, சாஸ்திரங்கள் பல தொகுத்து, மாமலை படை சூழ முத்தமிழ் வேந்தர்கள் பலர் ஆண்ட மண் நம் மண். ஆண்ட பரம்பரை அடிமையாகி போனதன் விளைவு மக்களாட்சி எனும் மாபெரும் தத்துவத்தில் மக்களை மாக்கள் ஆளும் நிலை வந்தேறி போனது. மாற்றம் காண வேண்டும் என்று கூறி மக்களையும் கூட இவர்கள் மாக்களாக்குவதற்கு முன் மக்களையும் மாணாக்கர்களையும் விழிப்புற செய்யும் ஓர் மிகப்பெரும் சேவையின் திறவுகோலாக இப்பத்திரிக்கை அமையும் என்று நாங்கள் நம்புகின்றோம். இதுவரை வீழ்ந்திருந்த இளஞ்சமுதாயம் விழித்துக்கொண்டது, விழித்துக் கொண்டால் மட்டும்போதுமா சமுதாயத்தின் விழுதுகளாக மாறி புதியதொரு புரட்சி படைப்போம் வாருங்கள்.மாற்றம் என்பது சொல் அல்ல செயல் மாற்றம் காண நாம் மாற வேண்டும் செயல் நம்மிடம் இருந்தே தொடங்கப்பட வேண்டும். பேச்சை விட பேனாக்கே கூர்மை அதிகம் இனி நமது பயணம் இந்த பேனா முனையில் இருந்தே தொடங்கட்டும்!!! ஒன்றுபடுவோம்!! இனம் காப்போம் !! ஆதாயம் வேண்டாம்!! ஆதரவு தாரீர் !!